அணியதிகாரம் | 559 | முத்துவீரியம் |
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
1286. யாப்பினுட் பற்பல வடிகளி
னின்ற
இருமொழி களைப்பொரு ளேற்கு
மிடத்துக்
கூறுவ கொண்டு கூட்டாகு மென்ப.
என்பது, செய்யுளடிகள்
பலவினுநின்ற சொற்களைப் பொருள் ஏற்குமிடத்து
எடுத்துக்கூறல் கொண்டு
கூட்டுப்பொருள் கோட்செய்யுள்.
(வ-று.)
ஆலின்மேற் பாயுங் குவளை
குளத்தலரும்
வாலி னெடிய குரங்கு. (29)
பிரிபொருட் சொற்றொடர்
1287. ஒருபொருள் பயவா தொருவித்
தோன்றல்
பிரிபொருட் சொற்றொடர்ப்
பெயரா கும்மே.
என்பது, ஒருபொருளைப் பயவாமல்
நீங்கித்தோன்றல் பிரிபொருட்
சொற்றொடர்வழு.
(வ-று.)
கொண்டன் மிசைமுழங்கக்
கோபம் பிறந்தனவால்
தெண்டிரைநீ ரெல்லாந் திருமுனியே-யுண்டுமிழ்ந்தான்
வஞ்சியார் கோமான் வரவொழிக மற்றிவளோர்
பஞ்சியார் செஞ்சீ றடி.
(தண்டி-மேற்) (30)
அது வழுவமைதியாகும் இடம்
1288. பித்த மயக்கினும் பெருங்குடி
வெறியினும்
வழுவின் றென்மனார் மறையுணர்ந்
தோரே.
என்பது, பித்தினான்
மயங்கியவிடத்தும் கள்ளுண்டு களித்த
விடத்தும் குற்றமன்று.
(வ-று.)
காம ருருவங் கலந்தேன்யான்
காங்கேயன்
வீமனெதிர் நின்று
விலக்குமோ-தாமரைமேன்
மால்பொழிய வந்தா ரருகர் மதுவுடனே
பால்பொழியு மிவ்வூர்ப் பனை.
(தண்டி-மேற்) (31)
செய்யுளணி முற்றும்.
அணியிலக்கணம் முற்றும்.
|