எழுத்ததிகாரம்57முத்துவீரியம்

மென்கணம் இடைக்கண முயிர்க்கணமாகிய நாற்கணமும் வரினியல்பாம்.

(வ-று.) நம்பிபெரியன், நம்பிநல்லன், நம்பிவலியன், நம்பியவன் அவன் சிறியன்,
அவனல்லன், அவன்வலியன்,, அவனரியன். (34)

எய்தியதன்மேற் சிறப்புவிதி

194. அவற்றுள்
     இ, ஐ யிறுதிமுன் வன்கண மிகுமே.

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள், இ, ஐ இறுதி முன் வன்கணம்வரின் மிக்குமுடியும்.

(வ-று.) செட்டிக்கூத்தன், நங்கைப்பெண். (35)

பொதுப்பெயர்முன் நாற்கணம்

195. இருமைக் கும்பொது வியல்பா தலுமுள.

(இ-ள்.) அஃறிணைக்கும் உயர்திணைக்கும் பொதுவாகிய பொதுத்திணை
யியல்பாதலுமுள.

(வ-று.) சாத்தன் பெரியன், சாத்தனல்லன், சாத்தன்வலியன், சாத்தனரியன்,
சாத்திபெரியள், சாத்திநல்லள், சாத்திவலியள், சாத்தியரியள் எனவரும்.

(வி-ரை.)

‘‘அஃறிணை விரவுப்பெயர் இயல்பு மாருளவே’’ (தொகை - 13)

என்பர் தொல்காப்பியர். (36)

வினை முதற்பொருளான் வரும் தொழிற்சொல்

196. இனமாந் தொழிற்பெய ரெய்தின் வேற்றுமை
     வழியியல் பாதலு முறழ்தலு மாகும்.

(இ-ள்.) வேற்றுமைக்கண், மெய்யையுமுயிரையும் ஈறாகிய மொழிக்குமுன்,
மூன்றாவதற்குரிய வினைமுதற்பொருளான் உளவாகிய தொழிற்சொற்கள்வரி னியல்பாதலும்
உறழ்தலுமாம்.

(வ-று.) பேய்கோட்பட்டான் = பேய்க்கோட்பட்டான். புலிகடிக் கப்பட்டான் =
புலிக்கடிக்கப்பட்டான்.

(வி-ரை.) பேய் புலி என்னும் மெய், உயிரீற்றுச் சொற்கள் வினைமுதற்பொருளாக
வந்தன. அவற்றான் ஆகிய தொழில்கள் முறையே