எழுத்ததிகாரம் | 59 | முத்துவீரியம் |
(வ-று.) பருத்திகுறிது,
காரைகுறிது, மாசித்திங்கள், சித்திரைத்
திங்கள், கிளிகுறிது,
கிளிக்குறிது, திணைகுறிது, திணைக்குறிது எனவரும். (39)
சுட்டு முதலாகிய இகர
ஐகாரம்
199. இகரச் சுட்டு மைகா னிறுதியும்
மிகுதலும் உறழ்தலும்
உளவென மொழிப.
(இ-ள்.) சுட்டுமுதலாகிய
விகரமு மைகாரமும் மிகுதலும் உறழ்தலுமாம்.
(வ-று.)
அதொளிக்கொண்டான், ஆண்டைக்கொண்டான், அவ்
வழிகொண்டான்,
அவ்வழிக்கொண்டான்;
ஆங்கவைகொண்டான். ஆங்கவைக்கொண்டான். (40)
ஆறனுருபும் நான்கனுருபும்
200. ஆறு நான்கு மிரட்டுத
லிலவே.
(இ-ள்.) ஆறனுருபு
நான்கனுருபும் இரட்டுத லிலவாமென்க.
(வ-று.) தமது, தமக்கு; நமது,
நமக்கு.
(வி-ரை.) தனிக்குறில்முன்
ஒற்று உயிர்வரின் இரட்டுதல் விதி. ஆயினும் தாம்
நாம்
என்பன ஆறனுருபையும், நான்கனுருபையும்
ஏற்கும்கால் தம், நம் எனக் குறுகி வரும்
உயிருடன்
ஏறி முடிதலேயன்றி இரட்டுதல் இல்லை என்பது இதன்
கருத்தாகும். (41)
நும்
201. நும்மெ னிறுதியு
மந்நிலை திரியாது.1
(இ-ள்.) நும்மென்னு மகரவீறு
மிரட்டு தலிலவாமென்க.
(வ-று.) நுமது, நுமக்கு
எனவரும். (42)
எண்ணுப் பெயரும் நிறைப்
பெயரும் அளவுப் பெயரும்
202. எண்ணிறை யளவு மேயொடு
சிவணும்.
(இ-ள்.) எண்ணுப்பெயரு
நிறைப்பெயரு மளவுப்பெயரு மேகாரச்சாரியை பெறும்.
1. தொல் . எழுத்து .
தொகைமரபு . 20.
|