எழுத்ததிகாரம்62முத்துவீரியம்

இதுவுமது

211. யாகார வினாவு மவற்றோ ரற்றே.

(இ-ள்.) வினாப்பெயரைத் தராநின்ற யாவும் அற்றுச்சாரியை பெறுமென்க.

(வ-று.) யாவற்றை. (52)

அன் சாரியைபெறும் சொற்கள்

212. உவ்விறு சுட்டன் னொடுவரு மென்ப.

(இ-ள்.) சுட்டு முதலாகிய உகரவீற்றுச்சொற்கள் அன்சாரியை பெறும்.

(வ-று.) அதனை, இதனை, உதனை. (53)

நீ யென்னும் பெயர்

213. நீயெனு மொருபெயர் நின்னெனத் திரியும்.

(இ-ள்.) நீயென்னு முன்னிலை யொருமைப்பெயர் நின்னெனத் திரியுமெனவறிக.

(வ-று.) நின்னை. (54)

ஒன் சாரியைபெறும் ஈறு

214. ஓகார விறுதிக் கொன்னே சாரியை.1

(இ-ள்.) ஓகார விறுதிப்பெய ரொன்சாரியை பெறுமென்க.

(வ-று.) கோஒனை, கோஒனால், கோஒற்று. (55)

அத்துச்சாரியை பெறும் மரப் பெயர்கள்

215. அ, ஆ விறுமர மத்தொடு சிவணும்
     ஏழ னுருபுவந் தியையுங் காலே.

(இ-ள்.) மரப்பெயரை யுணர்த்தும் அ, ஆ வீற்று மொழிகள் ஏழாம் வேற்றுமை
வந்தியையுங்கால் அத்துச்சாரியை பெறும்.

1. தொல் - எழுத்து - உருபியல் - 8.