எழுத்ததிகாரம் | 63 | முத்துவீரியம் |
(வ-று.) விளவத்துக்கண்,
பலாவத்துக்கண். (56)
இன்சாரியை பெறும் ஈறுகள்
216. ஞநவிறு மொழியின்
னொடுநடை பெறுமே.
(இ-ள்.) ஞநக்களை
இறுதியாகிய மொழிகள் இன்சாரியை பெறுமென்க.
(வ-று) உரிஞினை,
பொருநினை. (57)
அற்றுச்சாரியை பெறும்
சொற்கள்
217. சுட்டுமுதல் வகர
மற்றொடு சிவணும்.
(இ-ள்.) அவ், இவ், உவ்
என்னுஞ் சுட்டெழுத்தை முதலாக வுடைய வகரவீற்றுச்
சொற்கள் அற்றுச்சாரியைபெறும்.
(வ-று.) அவற்றை, இவற்றை,
உவற்றை. அவ் + அற்று + ஐ = அவற்றை எனவரும்.
(வி-ரை.)
‘‘வவ்விறு சுட்டிற்
கற்றுறல் வழியே’’ (உருபு - 11)
என்பது நன்னூல். (58)
தெவ் என்னும் சொல் இன்
பெறுதல்
218. ஏனைய வகரக் கின்னே
சாரியை.
(இ-ள்.) இவை யொழிந்த
தெவ் வென்னுஞ்சொல் இன்சாரியை பெறும்.
(வ-று.) தெவ்வினை.
(வி-ரை.)
‘‘ஏனை வகரம் இன்னொடு
சிவணும்’’ (உருபு - 12)
என்பது தொல்காப்பியம்.
(59)
மகர இறுதி அத்துப்
பெறுதல்
219. மஃகான் புள்ளிமுன்
னத்தே சாரியை1.
1. தொல் - எழுத் - உருபு - 13.
|