எழுத்ததிகாரம் | 65 | முத்துவீரியம் |
எல்லாம் எனும் பெயர்
224. அற்றெல் லாம்பெறு மாயிடை யும்மை
இறுதியொடு சிவணு
மென்மனார் புலவர்.
(இ-ள்.) எல்லாமென்னும்
பொதுப்பெயர் அற்றுச்சாரி பெறும்,
சாரியையீற்றில் உம்மை
நிலைபெறும்.
(வ-று.) எல்லாவற்றையும் என
வரும். (65)
உயர்திணையில் எல்லாம்
எனும் பெயர்
225. உயர்திணை யாயி
னம்மிடை தோன்றும்.
(இ-ள்.) எல்லாமென்னும்
பொதுச்சொல் உயர்திணையாயின், நம்முச்சாரியை
பெற்றுக் கடையில் உம்மை நிலைபெறுமென வறிக.
(வ-று.) எல்லா நம்மையும்.
(வி-ரை.)
‘‘உயர்திணை யாயின்
நம்மிடை வருமே’’ (உருபு - 18)
என்பது தொல்காப்பியம்.
(66)
எல்லாரும் எல்லீரும்
என்னும் பெயர்கள்
226. எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப்
புல்லு முருபின் பின்ன
ரும்மே1.
(இ-ள்.) எல்லாருமென்னும் படர்க்கைப்பெயரும்
எல்லீரு மென்னும்
முன்னிலைப்பெயருமாகிய இரண்டு பெயர்களும் ஈற்றி
னும்மையை நீக்கி, முறையே தம்மும்
நும்மும் பொருந்த
வுருபின் பின் உம்மைவரும்.
(வ-று.) எல்லார்
தம்மையும், எல்லீர் நும்மையு மெனவரும். (67)
தான், யான் எனும்
பெயர்கள்
227. தான்முதல் குறுகும்
யானென் னாகும்.
(இ-ள்.) தானென்னுந் தன்மை
யொருமைப்பெயர் நெடுமுதல் குறுகும், யானென்னுந்
தன்மையொருமைப்பெயர் என் எனத் திரியும்.
1. நன் - எழுத்து - உருபு . 8.
|