எழுத்ததிகாரம் | 66 | முத்துவீரியம் |
(வ-று.) தன்னை, என்னை. (68)
இன்னொடு சிவணும் எண்ணுப்பெயர்கள்
228. எல்லா வெண்களு
மின்னொடு சிவணும்.
(இ-ள்.)
எண்ணுப்பெயரெல்லாம் இன்சாரியை பெறும்.
(வ-று.) ஒன்றினை, இரண்டினை,
மூன்றினை, நான்கினை, பிறவுமன்ன.
(வி-ரை.)
‘‘எண்ணின் இறுதி
அன்னொடு சிவணும்’’ (உருபு - 26)
என்பர்
தொல்காப்பியர். இவர் அதற்கு மாறாக இன்னொடு
சிவணும் என்று கூறுகிறார்.
வழக்கறிந்து ஏற்பது
கொள்க. (69)
டறவொற்றிரட்டும்
குற்றியலுகர ஈற்றுச் சொற்கள்
229. ஒற்றிடை மிகூஉங்குற்
றுகரமு முளவே.
(இ-ள்.) இடையிலொற்று
மிக்குமுடியுங் குற்றிய லுகரங்களும் உளவாம்.
(வ-று.) ஆட்டை, கயிற்றை.
(வி-ரை.) நெடிற் றொடர்க்குற்றுகர
ஈறும், உயிர்த்தொடர்க் குற்றுகர ஈறும்
உருபேற்குங்கால் இடையில் ஒற்றுமிக்கு நிற்றலும் உள
என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.
யாடு + ஐ = யாட்டை, முயிறு +
ஐ = முயிற்றை.
‘‘நெடிலோடு உயிர்த்
தொடர்க் குற்றுகரங்களுள்
டறவொற் றிரட்டும்
வேற்றுமை மிகவே’’ (உயிரீற் - 33)
என்னும் நன்னூல் நூற்பா
இதனை நன்கு விளக்குதல் காண்க. (70)
ஒன்று முதல் எண்முன் பத்து
வருதல்
230. ஒன்று முதலெட் டீறா மெண்களை
ஊர்ந்து வரும்பத் தானொடு சிவணிப்
பகரவொற் றொழியமே
லெல்லா மோடும்.
(இ-ள்.) ஒன்றுமுத
லெட்டீறாகிய வெண்களையூர்ந்து வரும் பத்தென்னு மெண்
ஆனொடு சிவணிப் பகரமெய்யொன்று நிற்க
மற்றைய வெழுத்துக்க ளெல்லாங் கெடும்.
|