எழுத்ததிகாரம்67முத்துவீரியம்

(வ-று.) ஒன்று + பத்து + ஐ = ஒருபானை, இருபானை, முப்பானை, நாற்பானை,
ஐம்பானை, அறுபானை, பிறவுமன்ன. (71)

ஒன்பதின் முன்னும் ஆன்வருதல்

231. ஒன்பது மானொடு மொத்து நடக்கும்.

(இ-ள்.) ஒன்பதென்னு மெண்ணுப்பெயரும் ஆனைப் பெறும்.

(வ-று.) ஒன்பது + ஐ = ஒன்பானை. (72)

சுட்டுமுதலாகிய ஆய்தப்பெயரும் யாதென்பெயரும்

232. ஆய்தச் சுட்டும் யாது மன்பெறும்
     ஆவயி னாய்த மழியுஞ் சுட்டே.

(இ-ள்.) சுட்டுமுதலாகிய வாய்தவீறும், யாதெனவருங் குற்றிய லுகரவீறும்
அன்சாரியைபெறும். ஆயிடைச் சுட்டு ஆய்தங்கெடும்.

(வ-று.) அஃது + ஐ = அதனை, இதனை, உதனை, யாதனை, (73)

திசைப்பெயர்முன் ஏழனுருபு வருதல்

233. திசைப்பெயர் முன்வரு மேழ னுருபிற்
     கின்னென் சாரியை யின்றியு மியலும்

(இ-ள்.) திசைப்பெயர்க்கு முன்வரும் ஏழாம் வேற்றுமையுருபிற்கு
இன்சாரியை யின்றியும் வரும்.

(வ-று.) வடக்கின்கண், வடக்குக்கண் எனவரும். (74)

1. அகர ஈறு

அகரச்சுட்டு முதலியவற்றின் முன் வல்லினம் வருதல்

234. அகரச் சுட்டு மாங்கவு முவமையும்
     எனவென் னெச்சமு மிருவழி யினுமிகும்.

(இ-ள்.) அல்வழி வேற்றுமையினும், அகரச்சுட்டும், ஆங்க
என்னுமுரையசைக்கிளவியும், உவமையுருபும், எனவென்னும் வினை யெச்சமும், க, ச, த,
பக்கள் வரின் மிக்குமுடியும்.