எழுத்ததிகாரம் | 68 | முத்துவீரியம் |
(வ-று.) அக்கொற்றன், ஆங்கக்கொண்டான்,
புலிபோலக் கொண்டான்,
கொள்ளெனக்கொண்டான். (75)
வினையெச்சம் மிக்கு
முடிதல்
235. வினையெஞ்சு கிளவியு
மிகுவென மொழிப.
(இ-ள்.)
வினையெச்சமொழிகளும் மிக்குமுடியும்.
(வ-று.) கூவப்போயினான்;
செய்யப்போனான் எனவரும்.
(வி-ரை.)
‘‘வினையெஞ்சு
கிளவியும் உவமக் கிளவியும்
எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக்
கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே’’
(தொல் - உயிர்மயங் - 2)
என்ற நூற்பாவில் 234, 235
ஆகிய இரு நூற்பாக்களின் கருத்துக்கள் அடங்கி நிற்றல்
காண்க.
(76)
அகரச்சுட்டின் முன்
மென்கணம் வருதல்
236. அகரச் சுட்டின்முன் ஞ,
ந, மத் தோன்றிற்
றத்தமொற் றிடைமிகு
மென்மனார் புலவர்.
(இ-ள்.) அகரச்சுட்டின் முன்
ஞ, ந, மக்கள் வரின், தத்த மெய்களிடையின்
மிக்குமுடியுமெனவறிக.
(வ-று.) அ + ஞாண் = அஞ்ஞாண்;
அந்நூல்; அம்மணி எனவரும்.
(வி-ரை.)
‘‘சுட்டின் முன்னர்
ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல்
வேண்டும்’’ (தொல் - உயிர்மயங் - 3)
என்பது தொல்காப்பியம்.
(77)
அகரச்சுட்டின் முன்
இடைக்கணம் வருதல்
237. வயவரின் வகரம்
வருமென மொழிப.
(இ-ள்.) அகரச்சுட்டின்முன்,
வ, யக்கள் வரின், வகர வொற்று இடையில் வரும்.
|