எழுத்ததிகாரம்69முத்துவீரியம்

(வ-று.) அ + வளை = அவ்வளை, அ + யாழ் = அவ்யாழ்.

(வி-ரை.)

‘‘யவமுன் வரினே வகரம் ஒற்றும்’’ (உயிர் மயங்கியல் - 4)

என்பது தொல்காப்பியம். (78)

அகரச்சுட்டின் முன் உயிர்க்கணம் வருதல்

238. ஆவி வரினு மவ்விய னிலையும்.

(இ-ள்.) அகரச்சுட்டின் முன் உயிர்வரினும், வகரவொற்று இடையில் வரும்.

(வ-று.) அ + அடை = அவ்வடை; பிறவுமன்ன.

(வி-ரை.)

‘‘உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது’’ (உயிர்மயங்கியல் - 5)

என்பது தொல்காப்பியம். (79)

செய்யுட்கண் அகரம் ஆகார மாதல்

239. யாப்பினுள் அ, ஆ வாகு மென்ப.

(இ-ள்.) செய்யுளில் அகரம் ஆகாரமாகும்.

(வ-று.) அ + இடை = ஆயிடை எனவரும்.

(வி-ரை.)

‘‘நீட வருதல் செய்யுளுள் உரித்தே’’ (உயிர்மயங்கியல் - 6)

என்பது தொல்காப்பியம். (80)

சாவ என்பதில் இறுதி உயிர்மெய் கெடுதல்

240. சாவவென் மொழியீற் றுயிர்மெய்சா தலும்விதி1.

(இ-ள்.) சாவவென்னும் வினையெச்சச் சொல்லினதிறுதி மெய் கெடுதலுமாம்.

(வ-று.) சாவக்குத்தினான்=சாக்குத்தினான். (81)

1. நன் - எழுத் - உயிரீற்று - 19.