எழுத்ததிகாரம் | 70 | முத்துவீரியம் |
அகர ஈற்றில் மிகாதன
241. வியங்கோ ளண்மை
விளியு முவமையுஞ்
செய்த செய்யிய வெனுமீ ரெச்சமும்
அம்மவும் பலவு மிகாதியல்
பாகும்.
(இ-ள்.) வியங்கோளும்,
அண்மை விளியும், உவமையும், செய்த வென்னும்
பெயரெச்சமும், செய்யியவென்னும் வினையெச்சமும்,
அம்மவென்னு முரையசைக்
கிளவியும், பலவும்
மிகாதியல்பாம்.
(வ-று.) வாழிய கொற்றா, ஐய
போகேல், பால்போல் சொல், செய்த சாத்தன்,
செய்யிய போனான் அம்ம கொற்றா, பல குதிரை. (82)
உரையசைச்சொல் நீண்டு
வருதல்
242. அம்ம விறுதி
நீட்டமும் வரையார்.
(இ-ள்.) அம்மவென்னு
முரையசைக் கிளவியிறுதி நீட்டமும் வரையாது
கொள்வார்.
(வ-று.) அம்மா கொற்றா.
(வி-ரை.)
‘‘உரைப்பொருட் கிளவி
நீட்டமும் வரையார்’’ (உயிர்ம - 10)
என்பது தொல்காப்பியம்.
(83)
வாழிய என்பதின் இறுதி
உயிர்மெய் கெடுதல்
243. வாழிய விறுதி கெடுதலு
முரித்தே.
(இ-ள்.) வாழியவென்னும்
வியங்கோளீறு கெடுதலுமாம்.
(வ-று). வாழியகொற்றா,
வாழிகொற்றா எனவரும். (84)
பலசில என்பன தம்முன்
தாம் வருதல்
244. பலசில வெனுமிவை
தம்முன் றாம்வரின்
இயல்பு மிகலும் அகர மேக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலு
முளபிற.1
1. நன் - எழுத் - உயிரீற் -
20.
|