எழுத்ததிகாரம் | 72 | முத்துவீரியம் |
(இ-ள்.) உம்மை
தொக்குநின்ற விருபெயர்த் தொகைச் சொற்கு அகரச்சாரியை
யுரித்தாகும்.
(வ-று.) இராஅப் பகல்.
(வி-ரை.)
‘‘உம்மை யெஞ்சிய
இருபெயர்த் தொகைச்சொல்
மெய்ம்மை யாக அகரம்
மிகுமே’’ (உயிர்மக - 21)
என்ற
தொல்காப்பியத்தைத் தழுவியது இந் நூற்பா வாகும்.
(89)
ஆகார ஈற்றுச் சொற்கள்
249. ஆவு மாவு மழைப்பும்
வினாவு
மியாவும் பலவு மிகாதியல்
பாகும்.
(இ-ள்.) ஆவென்னும்
பசுப்பெயரும், மாவென்னும் பல பொருளொரு சொல்லும்,
விளிப்பெயரும், வினாப்பெயரும், மியாவென்னு
முன்னிலையுரையசைக்கிளவியும்,
பலவையுணர்த்தும்
பலவுமிகாதியல்பாகும்.
(வ-று.) ஆகுறிது, மாகுறிது,
ஊராகொள், கேண்மியா கொற்றா, உண்ணா குதிரைகள்
எனவரும்.
(வி-ரை.) பலவும் என்பது
அஃறிணைப் பன்மைப் பொருளை யுணர்த்தும் ஆகார ஈற்று
முற்றுவினைச் சொல்லைக் குறிக்கும். (90)
இதுவுமது
250. ஓரெழுத்து மொழியுங்
குறிற்கீ ழாவும்
அகரச் சாரியை பெறுமென
மொழிப.
(இ-ள்.) ஓரெழுத்
தொருமொழியும், ஒற்றெழுத்தின் முன்னின்ற ஆவும்
அகரச்சாரியை
பெறும்.
(வ-று.) கா அக்கோடு, பலா
அக்கோடு எனவரும்.
(வி-ரை.)
‘‘குறியதன் முன்னரும்
ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக்
கிளவி’’ (உயிர்ம - 24)
என்பது தொல்காப்பியம்.
(91)
|