எழுத்ததிகாரம் | 73 | முத்துவீரியம் |
குறியதன் கீழ்வரும் ஆகார
ஈற்றுச்சொல்
251. குறியதன் கீழாக்
குறுகலு மதனோ
டுகர மேற்றலு மியல்புமாந்
தூக்கின்1.
(இ-ள்.) குற்றெழுத்துக்கு
முன்னின்ற ஆ, அ ஆதலும் அவ்வகரத்தோடு உகரம்
பெறுதலு மியல்பாதலுஞ் செய்யுட்கணாம்.
(வ-று.) நிலா, நில, நிலவு
எனவரும். (92)
நிலா என்னும் பெயர்
252. நிலாப்பெய ரின்னொடு
நிலவுதல் வரையார்.
(இ-ள்.)
நிலாவென்னும்பெயர் இன்சாரியை பெறுமென்க.
(வ-று.) நிலாவின் காந்தி
எனவரும். (93)
இரா வென்னும் பெயர்
253. இராப்பெய ருக்கில
வாமென மொழிப.
(இ-ள்.) இராவென்னும்
பெயர்ச்சொல் இன்சாரியை பெறாவா மென்க.
(வ-று.) இராக்கொண்டான்.
(94)
மரப் பெயர்கள்
254. யாவும் பிடாவுந் தளாவு
மெலிமிகும்.
(இ-ள்.) மரப்பெயராகிய
யாவும், பிடாவும், தளாவும் மெல்லெழுத்து
மிக்குமுடியுமென வறிக.
(வ-று.) யா அங்கோடு, பிடா
அங்கோடு, தளா அங்கோடு.
(வி-ரை.)
‘‘யாமரக் கிளவியும்
பிடாவும் தளாவும்
ஆமுப் பெயரும்
மெல்லெழுத்து மிகுமே’’ (உயிர்ம. 27)
என்பது தொல்காப்பியம்.
(95)
1. நன் - எழுத் - உயிரீற் -
22.
|