எழுத்ததிகாரம் | 77 | முத்துவீரியம் |
(வ-று.) புளி + கோடு =
புளியங்கோடு. (107)
சுவைப்புளி
267. சுவைப்புளி முன்னின
மென்மையுந் தோன்றும்.1
(இ-ள்.) சுவையையுணர்த்தும்
புளியென்னும் பெயர் முன் றமக்கினமாகிய
மெல்லெழுத்துந் தோன்றுமென்க.
(வ-று.) புளிக்கறி =
புளிங்கறி எனவரும். (108)
நாள்முன் வரும்
தொழிற்பெயர்
268. தொழிற்பெயர்
வரின்நாள் ஆனொடு சிவணும்.
(இ-ள்.)
நாளென்னுஞ்சொற்கு முன்றொழிற்பெயர்வரின்
ஆன்சாரியை பெறும்.
(வ-று.)
பரணியாற்கொண்டான். (109)
4. ஈகார ஈறு
இடக்கர்ப்பெயரும்
முன்னிலைப்பெயரும்
269. ஈகார பகரமு நீயு
மியல்பே.
(இ-ள்.) ஈகாரபகரமாகிய இடக்கர்ப்பெயரும்,
நீயென்னு முன்னிலையொருமைப்பெயரு
மிகாதியல்பாம்.
(வ-று.) பீகுறிது, நீகுறியை.
(110)
இடக்கர்ப்பெயர் இன்னது
என்பது
270. ஈகார பகர
மிடக்கராய் வழங்கும்.
(இ-ள்.) ஈகார பகரமென்பது
பீ யென்னுந் தகாத மொழியாம் (111)
மீயெனும் இடப்பெயர்
271. மீயியல் பாதலு மெலிவலி மிகுதலும்
ஆகு மென்மனா ரறிந்திசி
னோரே.
1. நன் - எழுத்து - உயிரீற்
- 25.
|