எழுத்ததிகாரம்79முத்துவீரியம்

ஒடுமரக் கிளவி

275. ஒடுமரப் பெயர்உதி மரவிய னிலையும்.

(இ-ள்.) ஒடுவென்னு மரப்பெயர்க்கிளவி, உதியென்னு மரப் பெயரியல்பிற்றாய்
மெல்லெழுத்து மிக்குமுடியும்.

(வ-று.) ஒடு + கோடு = ஒடுவங்கோடு. (116)

ழகர வுகரம்

276. உகர ழகார நீடிட னுடைத்தே.

(இ-ள்.) ழகரமெய்யோடு கூடிய உகரம் நீடுமிடனுடைத்தாகும்.

(வ-று.) எழு + கள் = எழூஉக்கள் எனவரும்.

(வி-ரை.)

‘‘ழகர உகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயி னான’’ (உயிர்ம - 59)

என்பது தொல்காப்பியம். (117)

6. ஊகார இறுதி

277. ஊகார விறுதி முன்னிலை மொழியும்
     வினையெஞ்சு கிளவியு மிகுமென மொழிப.

(இ-ள்.) ஊகாரவீற்று முன்னிலை வினைச்சொற்கு முன்னும் வினையெச்சச்
சொற்குமுன்னுங் க, ச, த, பக்கள் வரின் மிக்குமுடியும்.

(வ-று.) உண்ணூக் கொண்டான், கைதூக் கொற்றா. (118)

பூப்பெயர்

278. பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்.1

(இ-ள்.) பூவென்னு மலர்ப்பெயர்க்கிளவி தமக்கினமாகிய மெல்லெழுத்தோடுந்
தோன்றுமென்க.

(வ-று.) பூ + கொடி = பூக்கொடி; பூங்கொடி எனவரும். (119)

1. நன் - எழுத்து - உயிரீற் - 50.