எழுத்ததிகாரம் | 80 | முத்துவீரியம் |
ஊன் என்னும் பெயர்
279. ஊனக ரத்தொடு மொழுகு
மென்ப.
(இ-ள்.) ஊவென்னு
மிறைச்சிப் பெயர்க்கிளவி, னகரச் சாரியையோடு
நடக்கும்.
(வ-று.) ஊ + குறை = ஊன்குறை.
(120)
எய்தியதன்மேற் சிறப்பு
விதி
280. அக்கொடு வருதலு
மதனியல் பாகும்.
(இ-ள்.) அவ்வூவென்னும்
பெயர்க்கிளவி அக்குச்சாரியை பெறுதலு
மதனியல்பாகும்.
(வ-று.) ஊனக்குறை. (121)
ஆடூஉ, மகடூஉ என்னும்
பெயர்கள்
281. ஆடூஉ மகடூஉ வின்னொடு
நிலையும்.
(இ-ள்.) ஆடூஉவென்னு
மாண்பாற் படர்க்கைப்பெயரும், மகடூஉவென்னும் பெண்பாற்
படர்க்கைப்பெயரும், இன்சாரியை
பெறும்.
(வ-று.) ஆடூஉவின்கை,
மகடூஉவின்கை. (122)
7. ஏகார ஈறு
தேற்றேகாரம்
282. ஏகாரத் தேற்ற
மியல்பா கும்மே.
(இ-ள்.)
தேற்றவேகாரத்துக்கு முன்வருகிற வல்லினமியல்பா
மெனவறிக.
(வ-று.) அவனே கொண்டான்.
(123)
ஏ யென்னும் ஆயுதப் பெயர்
283. எகரச் சாரியை
யேயேற் கும்மே.
(இ-ள்.) ஏயென்னும்
ஆயுதப்பெயர்க்கிளவி எகரச்சாரியை பெறுமென்க.
(வ-று.) ஏஎக் கொட்டில்.
(124)
|