எழுத்ததிகாரம்81முத்துவீரியம்

சேயென் மரப்பெயர்

284. சேமரம் ஒடுமரச் செய்கையி னியலும்.

(இ-ள்.) சேவென்னு மரப்பெயர். ஒடுவென்னு மரப் பெயரைப்போல மெல்லினமிகும்.

(வ-று.) சேங்கோடு. (125)

சேவின் பசுப்பெயர்

285. ஆன்பெய ராயின்இன் னடையப் பெறுமே.

(இ-ள்.) சேவென்பது பசுவின் பெயராயின் இன்சாரியையடையப் பெறுமென்க.

(வ-று.) சேவின்கோடு. (126)

8. ஐகார ஈறு

விசை, ஞெமை, நமையென்னும் மரப்பெயர்கள்

286. விசைஞெமை நமையொடு விருக்கத் தியல்பே.

(இ-ள்.) மரப்பெயராகிய விசையும், ஞெமையும், நமையும் ஒடுவென்னும்
மரப்பெயரைப்போல் மெல்லெழுத்து மிக்கு முடியும்.

(வ-று.) விசை + கோடு - விசையங்கோடு. ஞெமைங்கோடு; நமைங்கோடு. (127)

ஆவிரை, பனை, அரை யென்னும் மரப்பெயர்கள்

287. ஆவிரை பனையரை யம்மொடு சிவணும்.

(இ-ள்.) ஆவிரையும் பனையும் அரையும் அம்முச்சாரியை பெறுமென்க.

(வ-று.) ஆவிரங்கோடு, பனங்கோடு, அரையங்கோடு. (128)

மேலனவற்றிற்குச் சிறப்புவிதி

288. அவற்றுள்,
     ஆவிரை பனையிறு வையுயி ரழியும்.

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள், ஆவிரை, பனையிறுதியாகிய ஐகார வுயிர் கெடும்.