எழுத்ததிகாரம்82முத்துவீரியம்

(வ-று.) ஆவிரங்காய், பனங்காய். (129)

பனைமுன் கொடி வருதல்

289. பனைமுன் கொடிவரின் மிகுமென மொழிப.

(இ-ள்.) பனையென்னு மரப்பெயர்க்குமுன், கொடியென்னுஞ் சொல்வரின்
மிக்குமுடியும்.

(வ-று.) பனைக்கொடி. (130)

பனைமுன் அட்டு வருதல்

290. அட்டு வரினா வாகு மென்ப.

(இ-ள்.) பனையென்னும் பெயருக்குமுன் அட்டென்னுஞ் சொல்வரின் ஆகாரமாகத்
திரியும்.

(வ-று.) பனாட்டு. (131)

மழை யென்னும் பெயர்

291. இன்னொடு மழையெதிர்ந் தியலு மென்ப.

(இ-ள்.) மழையென்னுங் கார்காலப்பெயர் இன்சாரியை பெறும்.

(வ-று.) மழையிற்கொண்டான்.

(வி-ரை.) மழையென்னுஞ் சொல் அத்துச் சாரியையும் பெறும் என்பர்
தொல்காப்பியர். (உயிர் - 85) (132)

9. ஓகார ஈறு

ஐயப் பொருளில் வரும் ஓகாரம்

292. ஐயவோ வினாவலி மிகாதியல் பாகும்.

(இ-ள்.) ஐயப்பொருண்மையையுடைய ஓகாரவினா மிகாது இயல்பாகுமென்க.

(வ-று.) யானோகொண்டேன். (133)

வேட்கைமுன் அவா வருதல்

293. அவாவரின் வேட்கையீ றாவியு மெய்யும்
     அழிந்து டகரமெய் ணகரவொற் றாகும்.