எழுத்ததிகாரம் | 84 | முத்துவீரியம் |
2. புள்ளியீறு
1. ஞகர ஈறு
ஞகர ஈற்றுத்
தொழிற்பெயர்
297. ஞகர னிறுதித்
தொழிற்பெய ருகரம்
பெறுதலு மிகுதலும்
பெற்றித் தாகும்.
(இ-ள்.) ஞகரமெய்
யிறுதியாகிய தொழிற் பெயர்க்கு முன் க, ச, த, ப
க்கள்வரின்
அல்வழி வேற்றுமையினும் உகரச்
சாரியை பெறுதலும் மிகுதலும் தனக் குரித்தாமென்க.
(வ-று.) உரிஞ் + கடிது =
உரிஞுக்கடிது. (138)
மேலதற்கொரு
சிறப்புவிதி
298. ஞ, ந, ம, வ வரினும்
உகரமொடு நிலையும்.
(இ-ள்.) ஞ, ந, ம, வ க்கள்
வரினும், உகரச்சாரியை பெறுமென்க.
(வ-று.) உரிஞுஞான்றது,
நீண்டது, மாண்டது, வலிது. (139)
2. நகர ஈறு
299. உகரச் சாரியை
யொடுவரு நகாரம்.
(இ-ள்.) நகரமெய்
யிறுதியாகிய மொழி, உகரச்சாரியை பெறுமென வறிக.
(வ-று.) பொருநுக்கடிது. (140)
இதுவுமது
300. வேற்றுமைக் கண்ணக
ரத்தொடு சிவணும்.
(இ-ள்.) வேற்றுமையாயின்
அகரச்சாரியை பெறும்.
(வ-று.) பொருநக்கடுமை
எனவரும். (141)
வெரிந் என்னும் சொல்
301. வெரிந் ஈறழிந்துமெல்
லினமிகு மென்ப.
|