| எழுத்ததிகாரம் | 85 | முத்துவீரியம் |  
  
(இ-ள்) வெரிந் என்னுஞ்
சொல்லிறுதி கெட்டு மெல்லெழுத்து மிக்குமுடியும். 
(வ-று.) வெரிங்குறை. 
(வி-ரை.) வெரிந் - முதுகு.
(142) 
சிறப்பு விதி 
302. வல்லின மிகுதலு மற்றத
னியல்பே. 
(இ-ள்.) முற்கூறிய வெரிந்
என்னுஞ்சொல் வல்லெழுத்து மிக்கு முடிதலுமாம். 
(வ-று.) வெரிக்குறை. (143) 
3. ணகர ஈறு 
ணகரம் டகர மாதல் 
303. ணகரமெய் டகரவொற்
றாகத் திரியும். 
(இ-ள்.) க, ச, த, ப க்கள்
வரின், ணகரமெய் டகரமெய்யாகத் திரியுமென்க. 
(வ-று.) மண் + குடம் =
மட்குடம். (144) 
பொதுப் பெயர் 
304. ஆணும் பெண்ணு
மிகாதியல் பாகும். 
(இ-ள்.) ஆணும்பெண்ணுமாகிய
பொதுப்பெயரியல்பாம். 
(வ-று.) ஆண்கை, பெண்கை
எனவரும். (145) 
முரண் என்னும் சொல் 
305. இயல்பா தலுந்திரி
தலுமுர ணியல்பே. 
(இ-ள்.) முரணென்னுஞ்சொல்
இயல்பாதலுந் திரிதலும் இயல்பாகுமென்க. 
(வ-று.) முரண்கடுமை,
முரட்கடுமை. (146) 
ஆணென் மரப்பெயர் 
306. ஆண்மர மாயி னம்மொடு
சிவணும். 
			
				
				 |