எழுத்ததிகாரம்86முத்துவீரியம்

(இ-ள்.) ஆணென்னுஞ்சொல் மரப்பெயராயின் அம்முச்சாரியை பெறுமென்க.

(வ-று.) ஆணங்கோடு. (147)

விண் என்பதன் முன் தொழிற் பெயர்

307. தொழிற்பெயர் வரின்விண் ணத்தொடு சிவணும்.

(இ-ள்.) விண்ணென்னும் இடப்பெயர்க்குமுன் தொழிற்பெயர் வரின் அத்துச்சாரியை
பெறும்.

(வ-று.) விண்ணத்துக் கொட்கும். (148)

ணகர ஈற்றுத் தொழிற் பெயர்

308. 1தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.

(இ-ள்.) தொழிற்பெயரெல்லாம் உகரச்சாரியை பெறும்.

(வ-று.) பண்ணுக்கடிது, உண்ணுக்கடிது. (149)

ணகர ஈற்றுக் கிளைப் பெயர்

309. இயல்பாங் கிளைப்பெய ரெல்லா மென்ப.

(இ-ள்.) கிளைப்பெயரெல்லாம் மிகாதியல் பாகும்.

(வ-று.) அமண்குடி, உமண்குடி. (150)

உணவைக் குறிக்கும் எண்

310. அல்வழி யுணவெண் டகர மாகும்.

(இ-ள்.) அல்வழிக்கண், உணவாகிய எண்ணென்னும் பெயர்ச்சொல் டகரமெய்யாகும்.

(வ-று.) எட்கோல்.

(வி-ரை.) எண் - எள். (151)

4. மகர ஈறு

311. மகர விறுபெயர் மிகலுமீ றழிதலும்
    ஆகும் வேற்றுமைக் கண்ணென மொழிப.

1. தொல் - எழுத் - புள்ளிமயங் - 11.