எழுத்ததிகாரம்87முத்துவீரியம்

(இ-ள்.) மகரமெய்யிறுதியாகிய மொழிகள் வேற்றுமைக்கண் மிகுதலும் ஈறு
கெடுதலுமாமெனவறிக.

(வ-று.) மரக்கோடு, மரநூல், மரவேர். (152)

இதுவுமது

312. அ, ஆ வரினீற் றயனீ ளலுமாம்.

(இ-ள்.) அகர ஆகாரங்கள் வரின் ஈற்றயல் நீளலுமா மென்க.

(வ-று.) மரம் + அடி = மராடி, குளம் + ஆம்பல் = குளாம்பல்.

(வி-ரை.)

‘அகர ஆகாரம் வரூஉங் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலு முரித்தே’ (புள்ளி - 16)

என்பது தொல்காப்பியம். (153)

மெல்லெழுத்துறழ்தல்

313. மெல்லின முறழ்சில மொழிகளு முளவே.

(இ-ள்.) மெல்லெழுத்து உறழ்ந்து முடியுஞ்சொற்களும் சிலவுளவாம்.

(வ-று.) குளம் + கரை + குளங்கரை, குளக்கரை. (154)

இல்லாம் என்னும் மரப்பெயர்

314. இல்லா மரமெனின் மெல்லெழுத்து மிகுமே.

(இ-ள்.) இல்லாம் என்னுஞ் சொல் மரப்பெயராயின் மெல்லெழுத்து மிக்குமுடியும்.

(வ-று.) இல்லாங்கோடு.

(வி-ரை.) இல்ல மரப்பெயர் என ஓதுவர் தொல்காப்பியர். (155)

மரம்

315. வேற்றுமை யல்வழி மெல்லெழுத் தாகும்.

(இ-ள்.) வேற்றுமையல்லாத அல்வழிக்கண் மெல்லெழுத் தாகுமென்க.