எழுத்ததிகாரம் | 89 | முத்துவீரியம் |
(இ-ள்.) ஈமும், கம்மும்,
உருமும் உகரச்சாரியை பெறுமென்க.
(வ-று.) ஈமுக்கடிது,
கம்முக்கடிது, உருமுக்கடிது. (161)
(வி-ரை.) ஈம் - சுடுகாடு. கம்
- தொழில். உரும் - இடி.
மேலனவற்றிற்குச்
சிறப்புவிதி
321. அவற்றுள்,
ஈம், கம் அக்கையு மேற்கு
மென்ப.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்,
ஈமும், கம்மும் அக்குச்சாரியையும் பெறும்.
(வ-று.) ஈமக்குடம்,
கம்மக்குடம். (162)
நாட்பெயர்
322. அத்து மானு நாளொடு
சிவணும்.
(இ-ள்.) நாளென்னுஞ்சொல்,
அத்துச்சாரியையும் ஆன்சாரியையும் பெறும்.
(வ-று)
மகத்தாற்கொண்டான். (163)
5. னகர ஈறு
323. னகரம்வேற் றுமைக்கண்
றகர மாகும்.
(இ-ள்.) வேற்றுமைக்கண்,
னகரமெய் க, ச, த, பக்கள் வரின் றகரவொற்றாகத்
திரியும்.
(வ-று.) பொற்குடம். (164)
மன், சின், ஆன், ஈன்
324. மன்னுஞ் சின்னு மானு மீனும்
அன்ன வியல்பின வாமென
மொழிப.
(இ-ள்.) மன், சின், ஆன்,
ஈன் ஆகிய நான்குபெயரும் முற்கூறியவாறே றகரமாகத்
திரியுமென்க.
(வ-று.) அதுமற்கொண்கன்
தேரே, காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை (அகம்-எ)
ஆற்கொண்டான், ஈற்கொண்டான் எனவரும்.
|