எழுத்ததிகாரம் | 90 | முத்துவீரியம் |
(வி-ரை.) ஆன்-அவ்விடம்.
ஈன்-இவ்விடம். ஊன்-உவ்விடம். (165)
அவ்வயின் முதலியன
325. சுட்டுமுதல் வயினும்
வினாமுதல் வயினும்
அப்பண் பினவா மாயுங்
காலே.
(இ-ள்.) சுட்டெழுத்தை
முதலாகவுடைய வயினென்னு மொழியும், வினாவெழுத்தை
முதலாகவுடைய வயினென்னு மொழியும் றகரமாகத்
திரியும்.
(வ-று.)
அவ்வயிற்கொண்டான். இவ்வயிற்கொண்டான்,
உவ்வயிற் கொண்டான்,
எவ்வயிற்கொண்டான்,
யாவயிற்கொண்டான். (166)
எகின் மரம்
326. எகின்மர மாயின்
அம்மொடு சிவணும்.
(இ-ள்.) எகினென்னுஞ்
சொல் மரப்பெயராயின் அம்முச்சாரியை பெறும்.
(வ-று.) எகினங்கோடு. (167)
குயின்
327. இருவழி யினுங்குயி
னியல்பா கும்மே.
(இ-ள்.) அல்வழிவேற்றுமை
இரண்டிடத்துங் குயினென்னுஞ் சொல்
மிகாதியல்பாகும்.
(வ-று.) குயின்கால்.
(வி-ரை.) குயின் - மேகம்.
குயினுதல்-துளைத்தல். குயின் என்பது பெயராகவும்
வரும்; வினையாகவும் வரும். (168)
மரம் அல் எகின்
328. மரமல் லெகின்மொழி வலிமெலி மிகுதலும்
அகரச் சாரியை யடையவும்
பெறுமே.
(இ-ள்.) மரப்பெயரல்லாத
எகினென்னுஞ் சொல் ஒருகால் வல்லினமும் ஒருகால்
மெல்லினமும் மிகுதலும் அதனோ டகரச்சாரியை
பெறுதலுமாம்.
|