எழுத்ததிகாரம்91முத்துவீரியம்

(வ-று.) எகின்கால், எகினக்கால், எகினங்கால் எனவரும். (169)

கிளைப்பெயர்

329. கிளைப்பெய ரெல்லா மிகாதியல் பாகும்.

(இ-ள்.) கிளைப்பெயர்க்கிளவிகளெல்லா மியல்பாகும்.

(வ-று.) எயின்குடி, எயின்சேரி எனவரும். (170)

மீன்

330. மீன்வல் லெழுத்துறழ் வும்பெறு மென்ப.

(இ-ள்.) மீனென்னுஞ்சொல் வல்லெழுத்துறழ்ந்து முடியுமெனவறிக.

(வ-று.) மீன்கண் - மீற்கண். (171)

தேன்

331. தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை
     மேவி னிறுதி யழிவும் வலிவரின்
     ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி.1

(இ-ள்.) அல்வழி வேற்றுமை இரண்டிடத்துந் தேன்னென்னுஞ் சொன்முன்
மெய்யெழுத்துக்கள் வரின் இயல்பாதலும் மெல்லெழுத்துக்கள் வரின் ஈறுகெடுதலும்
வல்லெழுத்துக்கள் வரின் ஈறுகெட்டு வலியுமெலியும் மிகலுமாம்.

(வ-று.) தேன்குடம், தேமலர், தேக்குடம், தேங்குடம். (172)

தேன் முன் இறால்

332. இறால்வரி னியல்பா தலுமின் னடைதலும்
     ஈறழிந் திரண்டு தகரமெய் யொற்றலும்
     மற்றத னியற்கையாம் வழுத்துங் காலே.

(இ-ள்.) தேனென்னுஞ்சொன்மு னிறாலென்னுஞ் சொல்வரி னியல்பாதலும் இன்சாரியை பெறுதலு மிறுதிகெட்டு இரண்டு தகரவொற்றடைதலுமாமென்க.

(வ-று.) தேனிறால்; தேனினிறால், தேத்திறால்.

1. நன் - எழுத் - மெய்யீற் - 11.