| எழுத்ததிகாரம் | 93 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.) ஆதனென்னும்
பெயரும், பூதனென்னும் பெயரும், பொதுப் பெயரைப்போல 
நிலைமொழியிறுதியும் வருமொழி
முதலுங் கெட்டு அவற்றோடிடை நின்ற தகரவொற்றும் 
உயிருங் கெடும். 
(வ-று.) ஆதன் + தந்தை =
ஆந்தை; பூதன் + தந்தை = பூந்தை. (176) 
இயற்பெயரும் சிறப்புப்
பெயரும் 
336. அவ்வியற் பெயர்சிறப் படுக்குங் காலை 
     இவ்விரு விதிகளு மேலா தம்முறும். 
(இ-ள்.) அவ்வியற்பெயர்
சிறப்புப் பெயரோடு புணருங்கால் இவ்விரண்டு விதிகளையும் 
பெறாது அம்முச்சாரியை பெறும். 
(வ-று.) கொற்று + கொற்றன்
= கொற்றங்கொற்றன். (177) 
அழன் 
337. அழனிறு கெடவலி
யாயிடை மிகுமே. 
(இ-ள்.) அழனென்னும்
பெயரிறுதிகெட வல்லெழுத்து மிகும். 
(வ-று.) அழன் + குடம் =
அழக்குடம். 
(வி-ரை.) அழக்குடம் -
பிணக்குடம். (178) 
கோன், பேன், தான் 
338. கோனும் பேனுந் தானு
மியல்பே. 
 (இ-ள்.) கோனென்னும்
பெயரும் பேனென்னும் பெயரும் தானென்னும் பெயரு 
மிகாதியல்பாம். 
(வ-று.) கோன்றந்தை,
பேன்றந்தை, தான்றந்தை. (179) 
தான், யான் 
339. தான்முதல் குறுகலும் யானென் னாகலும் 
     ஆகு மல்வழி யல்லாக்
காலை. 
(இ-ள்.) தானென்னும்
படர்க்கை யொருமைப் பெயர் நெடுமுதல் குறுகலும், 
யானென்னுந் தன்மை யொருமைப் பெயரென்னாகத்
திரிதலுமாமெனவறிக. 
			
				
				 |