எழுத்ததிகாரம் | 95 | முத்துவீரியம் |
தாய்
344. இயல்பாந் தாய்வேற்
றுமைவழி யென்ப.
(இ-ள்.) வேற்றுமைக்கண்
தாயென்னு முறைப்பெயர் மிகாது இயல்பாகுமென்க.
(வ-று.) தாய்கை.
(வி-ரை.)
‘‘தாயென் கிளவி
இயற்கை யாகும்’ (புள்ளி - 63)
என்பது தொல்காப்பியம்.
(185)
மகன்முன் தாய் வருதல்
345. மிகுமகன்
றாய்ப்பினர் மேவுங் காலை.
(இ-ள்.) தாயென்னு
மொழிக்குப்பின் மகனென்னுஞ் சொல்வரின்
மிக்குமுடியும்.
(வ-று.) மகன்றாய்க்கலாம்.
(வி-ரை.)
‘மகன்வினை கிளப்பின்
முதனிலை யியற்றே’ (புள்ளி - 64)
என்பது தொல்காப்பியம்.
(186)
யகரத்தின்முன்
மெல்லினம் உறழ்தல்
346. மெல்லினம் உறழ்தரும்
மொழிகளு முளவே.
(இ-ள்.)
மெல்லெழுத்துக்கள் உறழ்ந்து முடியுஞ் சொற்களு
முளவாமென்க.
(வ-று.) வேய்க்குறை -
வேய்ங்குறை. (187)
வெதிர் முதலிய
மரப்பெயர்கள்
347. வெதிரார் பீர்சார்
மெல்லெழுத்து மிகுமே.
(இ-ள்.) வெதிரும், ஆரும்,
பீரும், சாரும் மெல்லெழுத்து மிக்குமுடியும்.
(வ-று.) வெதிர்ங்கோடு,
ஆர்ங்கோடு, பீர்ங்கோடு, சார்ங்கோடு எனவரும்.
|