எழுத்ததிகாரம் | 96 | முத்துவீரியம் |
(வி-ரை.)
‘‘ஆரும் வெதிருஞ் சாரும்
பீரும்
மெல்லெழுத்து மிகுதல்
மெய்பெறத் தோன்றும்’’ (புள்ளி - 68)
என்பது தொல்காப்பியம்.
(188)
பீர்
348. அவற்றுள்,
பீரங் கிளவி யம்மொடுஞ்
சிவணும்.
(இ-ள்.) மேற்கூறியவற்றுள்
பீரென்னுஞ் சொல் அம்முச் சாரியையும் பெறும்.
(வ-று.) பீரங்கோடு.
(வி-ரை.)
‘பீரென் கிளவி
அம்மொடு சிவணும்’ (புள்ளி - 71)
என்பது தொல்காப்பியம்.
(189)
சார்
349. காழ்வரிற்
சார்மிகுங் கருதுங் காலே.
(இ-ள்.) சாரென்னுஞ்சொல்
காழென்னுஞ் சொல்லொடு புணரின் மிக்குமுடியும்.
(வ-று.) சார்க்காழ்.
(வி-ரை.)
‘சாரென் கிளவி
காழ்வயின் வலிக்கும்‘ (புள்ளி - 69)
என்பது தொல்காப்பியம்.
சார்க்காழ் - சார்
மரத்தினது விதை. (190)
எ. லகர ஈறு
350. லகாரம்வேற்
றுமைக்கண் றகர மாகும்.
(இ-ள்.) வேற்றுமைக்கண்,
லகரமெய் றகரவொற்றாகத் திரியுமென்க.
(வ-று.) கல் + குறிது =
கற்குறிது. (191)
|