எழுத்ததிகாரம் | 99 | முத்துவீரியம் |
(வ-று.) ஆலங்கோடு,
வேலங்கோடு. (200)
பூல்
360. பூலு மம்மொடு போதுவ
தியல்பே.
(இ-ள்.) பூல் என்னுஞ்
சொல்லும் அம்முச்சாரியை பெறுமென்க.
(வ-று) பூலங்கோடு. (201)
தொழிற் பெயர்
361. தொழிற்பெய
ரெல்லாந் தொழிற்பெய ரியல.1
(இ-ள்.) தொழிற்பெய
ரெல்லாம் உகரச்சாரியை பெறுமெனவறிக.
(வ-று.) புல் + கடிது =
புல்லுக்கடிது. (202)
வெயில்
362. அத்து மின்னு மடையும்
வெயிலே.
(இ-ள்.) ஒளியை யுணர்த்தும்
வெயில் என்னும் பெயர் அத்துச்சாரியையும்
இன்சாரியையும் பெறும்.
(வ-று.)
வெயிலத்துக்கொண்டான், வெயிலிற்கொண்டான்.
(203)
8. வரக ஈறு
அவ், இவ், உவ்
363. வவ்விறு சுட்டிற்
கற்றுறல் வழியே.2
(இ-ள்.) வகரமெய்யீறாகிய
சுட்டுப்பெயர்கள் அற்றுச் சாரியை பெறுமென்க.
(வ-று.) அவற்றை, இவற்றை,
உவற்றை எனவரும். (204)
இதுவுமது
364. ஆய்த மாகு மல்வழி
யான.
1. தொல் - எழுத் - புள்ளி -
81.
2. நன் - எழுத்து - உருபு - 11.
|