பக்கம் எண் :

120மாறனலங்காரம்

குமரனனையானுங்குறமகளன்னாளு
மமரர்குழாமெனக்கூண்டன்பர்--தமரணங்கே
நின்றிறைஞ்சுமாயோனைநின்றவூரங்கிதன்முன்
சென்றிறைஞ்சுவார்நீதிரும்பு.
(134)

இதனு ளுயர்திணைக் குயர்திணையும் ஒருமைப்பாற் கொருமைப் பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும் ஆண்பாலுக் காண்பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் வந்து திணையும் பாலு மயங்கா துவமை யாயிற்று. பகுதி - உடன்போக்கு. துறை - இயைபெடுத்துரைத்தல். நகரடைந்தமைகூறலுமாம்.

“மகிழ்வார்க்கு மல்லார்க்குந், தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரனீ,” “கலங்கவிழ்ந்தநாய்கன்போற் களைதுணைபிறிதின்றிப், புலம்பு மென் னிலைகண்டும் போகலனே யென்றியால்” என்பனவிவை யாண் பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலு மயங்கிவந் துவமை யாயிற்று.

அரிக்குழாமன்னவடலரக்கர்வாவும்
பரிக்குழாந்தேர்க்குழாம்பாயுங்--கரிக்குழா
மோர்வாளிபட்டுருள்வானோங்குசிலைக்கால்வளைகைக்
கார்வானமாலிமையோர்கண்.
(135)

எனவும்,

பிறைபுரைவெண்கோட்டுப்பிணர்த்தடக்கைவேழத்
திறைபுரந்தபொன்னகருக்கிப்பா--ருறைதருவான்
பூணவாவற்றெனமால்பொற்புருடையாட்கிரங்கும்
வேணவாநெஞ்சேவிடு.
(136)

எனவும், வரு மிவற்றுள் உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண் பாற்பன்மையும் அஃறிணைப் பன்மைச்சினைக் குயர்திணை யொருமை முதலும் மயங்கிவந் துவமையாயிற்று. வேழத்தையுடையவிறை - ஈண்டிந்திரன். அற்றென - அதுபோலுமென. பூணவா - மனத்துட்பூண்ட ஆசை. வேணவா - வேட்கைப்பெருக்கம். இவ் விரண்டினுண் முன்னது திணை - வாகைப்பொதுவியல். துறை - வில்வென்றி ; அல்லது திணை - பாடாண். துறை - கடவுள்வாழ்த்துமாம். பின்னது பகுதி - இரவுக்குறி, துறை - அருமைகேட்டழிதல்.