உவமை பிறக்குமென்றவாறு. அவை மேற் கூறப்படும். மயங்கியும் பிறழ்ந்து மென்பது எதிரதுபோற்றுந் தந்திரவுத்தி. இவற்றிற்கெல்லாம் உதாரணம் உரைநடையானுஞ் செய்யுணடையானும் வருமாறு :- புலியன்ன மறவனென்பது வினையுவமம். ‘மாரியன்ன வண்மை’ யென்பது பயனுவமம். ‘துடியன்ன விடை’யென்பது உறுப்புவமம். ‘செவ்வானன்ன மேனி’யென்பது உருவுவமம். ‘செவ்வானன்னமேனி’ யென்பது வண்ணமொன்றுமே பற்றி யுவமஞ்சென்றது. “ஊர்ந்ததேறே சேர்ந்தோளுமையே, செவ்வானன்னமேனியவ்வா, னிலங்குபிறையன்ன விலங்குவால்வையெயிற்” றென்பது வண்ணத்தோடு வடிவும் பற்றி யுவமஞ் சென்றது. வள்ளைக்கொடிமிசைபாய்மைக்கயல்போல்வார்குழையி னுள்புக்குலாவருமையுண்கண்ணாய்--புள்ளார் வகுளாம்புயன்வரைமேல்வான்பிறைக்குன்செங்கை முகுளாததென்னோமொழி. | (133) |
இதனுள் வினையு முருவு முறுப்புமாகிய மூன்றுவமையு மொரு பொருட்கண்ணே பிறிதொருபொருளுங்கூடி வந்தவாறு காண்க. இவை விரவுவமை. பகுதி - நாணநாடல். துறை - பிறைதொழுகென்றல். “பாவையன்ன பலராய மாண்கவின்” எ-து மகள்கட்சென்ற காதலுவமைக்கு நிலைக்களனாயிற்று. ‘என்னானை’ யென்பது மது. “முரச முழங்குதானை மூவருங்கூடி, யரசவையிருந்த தோற்றம்போலப், பாடல் பற்றிய பயனுடையெழாஅற், கோடியர்தலைவகொண்டதறிந” எ-து சிறப்பினாற்பெற்ற வுவமமாதலிற் சிறப்புநிலைக்களனாயிற்று. உலகத்து ளியல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு ‘ஓவத்தன்ன விடனுடைவரைப்பின்’ என்புழி அந்நகரின் செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் நல னிலைக்களனாயிற்று. நலனென்பது அழகு. ‘அரிமா வன்னவணங்குடைத்துப்பிற், திருமாவளவன்றெவ்வர்க்”கென ஒருவன் வலிநிலைக்களனாயிற்று. “அரவுநுங்குமதியி னுதலொளிகரப்ப”என்றது ஒன்றினிழிபுதோன்ற வுவமித்தலி னிழிபுநிலைக்களனாயிற்று. |