பக்கம் எண் :

118மாறனலங்காரம்

முதல்சினைவினைகுணமின்றியுமுயர்ந்தும்
பெருமையுஞ்சிறுமையும்பெற்றியிற்சிறந்து
மெண்மெய்ப்பாட்டினெழில்பெறமரீஇ
யகத்தினும்புறத்தினுமமர்தருநெறித்தா
யுரனுடையுரவோருளங்கொளமுதனூல்
வரன்முறைபுணர்க்குமாண்பிற்றாகும்.

(எ-ன்) வைத்தமுறையானே உவமையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமையென்னு மலங்காரத்தினது கூறுபாட்டை யாராயு மிடத்து வினையும் பயனு முறுப்பு முருவு மென்னு நான்கும் காரணமாகத் தோன்றுவனவாகியும், அங்ஙனந் தோன்றுவன வொரு பொருளோடொருபொரு ளுவமஞ்செய்யும்வழி யொன்றேயன்றி யிரண்டு மூன்று விரவுவனவாகியும், காதலுஞ் சிறப்பு நலனும் வலியு மவற்றோடுங் கிழக்கிடும்பொருளுமாகிய வைந்துந் தமக்கு நிலைக்களனாகியும், உயர்திணைக் குயர்திணையு முயர்திணைக் கஃறிணையு மஃறிணைக் கஃறிணையு மஃறிணைக் குயர்திணையு மாண்பாற் காண்பாலு மாண்பாற்குப் பெண் பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலும் ஒருமைப்பாற் கொருமைப்பாலு மொருமைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற் கொருமைப்பாலு மயங்காதும் மயங்கியும், முதற்கு முதலும் முதற்குச் சினையும் சினைக்குச் சினையுஞ் சினைக்கு முதலுமாகப் பிறழாதும் பிறழ்ந்தும், முதலுஞ் சினையும் வினையுங் குணனு மின்றியு முவமங் கூறுவனவாகியும், பொருளினுமுவம முயர்ந்து மிறப்பவுயர்வு மிறப்பவிழிபு முவமிக்குங்கா லின்னாவாகச் செய்யாது கேட்போர் மனங்கொள்ளும்படி சிறப்பிற்றீராவாகிச் சேர்தலியல்புசிறந்தும், எட்டு மெய்ப்பாட்டினொடுங் கூடி யழகுபெறு நிலைமைத்தாகி, அகப்பொருளினும் புறப்பொருளினுஞ் சென்று பொருந்துநெறியை யுடைத்தாய்க் கற்றுவல்ல அறிவுடையோ ரறிவிற்குப் பொருந்த முதனூல் வரலாற்றுமுறைமையிற் றிரியாது சேர்க்கப்பெறும் பெருமையை யுடைத்தென்றவாறு.

இதனுள் நான்கினுமென்ற வும்மை யெச்சவும்மையாகலா னவை நான்குமே காரணமாகியவற்றோடுஞ் சொற்பொருள் காரணமாகவும்