லெடுக்கப்பட் டுலகின்கண்ணே வழங்குதன்ஞாபகமாக விரிந்த நூல்களுள்ளும் பலவேறினமாக வாராய்ந்து பிரிக்கப்படும் பலவியல்களுள்ளுமோரியலை முதலே வெண்பாவிற்கூறி, யதன்பின்னர்வரு மேனையியல் களையகவலானு மழகிதாய்த் தமிதமிகூறுவது மரபாமென்றவாறு. அவை யாப்பருங்கலக்காரிகை, கயாகர நிகண்டு, சூடாமணி நிகண்டென்க. இலக்கணமு மென்றவும்மை யெச்சவும்மையாதலாற் கதைதொடர்ந்த விலக்கியங்களுள்ளும் வேறுவேறு பாவாகத் தமிதமிகூறலு மரபென்றவாறு. அவை சிலப்பதிகாரத்துள் மங்கலவாழ்த்துக்காதை மயங்கிசைக் கொச்சகக்கலியினும், அந்திமாலைச் சிறப்புச்செய்காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை இவை நிலைமண்டிலவாசிரியத்தும், கனாத்திறமுரைத்த காதை கலிவெண்பாவிலும் வந்தவாறுகாண்க. ஒழிந்தனவு மிவ்வாறுவந்தமை யாங்காங்குக் காண்க. (27) 28. | இருவகைநூன்மரபிவையெனமொழிப |
(எ-ன்) இதுவும் அந்நூலினைத் தொகைவகைவிரிப்படுத்தி யொழிபுகூறுதனுதலிற்று. (இ-ள்) நூலெனத் தொகையா னொன்றாய்நின்றவது இலக்கண விலக்கியமென வகையானிரண்டாம். நூலினது விரியின்மரபிவையெனக் கூறுவர் அகத்தியன் முதலிய தொல்லாசிரியரென்றவாறு. நூன்மரபு முற்றும். (28) 29. | புரப்போன்மரபினைப்புகலுங்காலைக் குலனுங்குணனுங்குரவரைப்பேணு நலனுங்கடவுளைநயத்தலுங்கருணையும் புலனவித்தொழுகலும்பொறையுந்தோற்றமு முலகியலறிந்துயிர்க்குறுதிகோடலுங் கற்றவர்காமுறவாழ்தலுங்காந்தியு மதிநிகர்கல்வியுங்கதிர்நிகர்வனவாம் வாய்மையுந்தூய்மையும்வழுவுதலின்றாய் வாடாக்கற்பகமணமலிபொற்பூக் கோடாச்செங்கேற்கொற்றவனிதியறை வான்சுவைமருந்தாயிரவாய்ச்சேடனிற் |
|