பக்கம் எண் :

பாயிரவுரை35

னாதல்வேண்டுமென்றா ரவ்வாரியன்போல மாணாக்கனுங் கல்வியுங் கவியுமுடையனாதற் குபாய முணர்-ற்று.

(இ-ள்) கற்றநூலன்றிக் கல்லாதவற்றையு மாராயுங்காலத்துக் கல்வியாலாய விழுமிய கூறுபாட்டையுடைய கலை பலவற்றுள்ளும் விழுமிய பயனென் றுலகங்கூறப்படுவதாஞ் சத்தங்களைத்தொடுத்துச் சாதிப்பதூஉம் தொலையாக் கல்வியுடன் சாதித்துவருவதூஉ முறையா மென்றவாறு.

(56)

57. பாவினையொலிபெறப்படனஞ்செய்திடு
நாவினனாகிநாற்கவிப்புலவோர்
புதுமொழிபுணர்ப்புழிப்பொறிப்பவனாகியு
மனப்படுமொருபொருண்மதித்தவரொருமொழி
யெடுத்ததற்கியைபுறவெதிரெதிர்பன்மொழி
தொடுப்பதும்பெயர்வினைகோப்புணப்பிறிதடி
தொடுப்பதுந்தொடைபலதொடர்ந்தொருபாவாய்
முடிப்பதுங்குறிக்கொளன்முதற்காரணமே.

(எ-ன்) சத்தஞ்சாதித்தற்கு முதற்காரண முணர்-ற்று.

(இ-ள்) புலவர்பலரும் பாடிய பாப் பாவினங்களை யவ்வவபாவிற் கமைத்த வொலிமுறையே படனஞ்செய்திடும் வாக்கினனாகியும், அந் நாற்கவிப்புலவர் புதுமொழிபுணர்ப்புழி யவர்க்குப் பட்டோலை பொறிப்பவனாகியும், ஒருபொருளைக் குறித்தவர் முதலேயோர் சொல்லையடுத்தலு மதன்மேற் பன்மொழி யவ்வடிக்குப் பொருந்தக் கொளுவுதலும், அதன் மேற் பலவடியையுந் தொடுத்தலும், அடிதொடர்ந்தா லொருதொடையினாதல் பலதொடையினாதல் ஒருபாவாக்கிப் பெயராதல் வினைபாதல் கோப்புண முற்றமுடிப்பது முதலாயினவற்றை மனத்துட் குறிக்கொளலுஞ் சத்தந்தொடுத்தற்கு முதற்காரணமா மென்றவாறு. ஒழிந்த வகலமுரையிற்கொள்க.

(57)

58. சொற்பொருளணிநலன்றோயாதாயினு
மடியாதெடுத்தடிமடக்குதலின்றா
யாப்பினதுறுப்பிழுக்காதிறுதியில்வினை
கோப்புணமுடித்தலதன்முதற்குறியே.