(எ-ன்) இதுவும் அச்சத்தஞ்சாதித்தற்கு முதற்குறி யுணர்-ற்று. குறியாவ திலக்கணம். உறுப்பு - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யென்னு மாறுறுப்பும். நலனென்பது கேட்டோர்க்கின்பங் கொடுத்தல். தோயாதது - கூடாதது. ஒழிந்த அகல முரையிற்கொள்க. (58) 59. | அருமணிநிரல்வைத்தன்னசொன்னல னொளியதனுட்சிறந்தன்னபொருணல னழகதற்காங்கமைந்தன்னவணிநல னுரனுடைப்பழம்பாட்டுணர்வுழியுணர்ந்தோர் வரனுடைப்பாட்டுணர்வாய்மையின்வருமே. |
(எ-ன்) அங்ஙன முன்னர்க்கூறிய முதற்குறிப்பும் குறிக்கொள்பவன் கூறுஞ் சத்தங்களினிடத்துச் சொன்னலனும் பொருணலனு மவ் விரண்டினாலுமான வணிநலனு மெய்துதற் குபாய முணர்-ற்று. உரனுடைப்பழம்பாட்டென்பன சங்கச்செய்யுள். ஒழிந்த அகல முரையிற்கொள்க. (59) பொதுப்பாயிர முற்றும் சிறப்புப்பாயிரம் இனிச் சிறப்புப்பாயிரமாவது பதினொருவகைத்தாம். அவை வருமாறு. 60. | எல்லைவழிநுதலியபொருள்யாப்பே நூற்பெயர்நுவல்வோன்பெயர்காரணம்பயன் காலங்கேட்போர்களனெனப்பதினொரு பால்புணர்த்துரைப்பதுசிறப்புப்பாயிரம். |
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று. (இ-ள்) எல்லையும், வழியும், நுதலியபொருளும், யாப்பும், நூற்பெயரும், நூனுவல்வோன்பெயரும், காரணமும், பயனும், காலமும், கேட்போரும், களனும் என்னும் பதினொருபகுதியாகச் சேர்த்துக் கூறுவது சிறப்புப்பாயிரமா மென்றவாறு. புணர்த்துரைப்பதென்ற விதப்பினால், நூல்செய்தோன் வழிபடு தெய்வத்தினையும், தெய்வமென்பதும் ஒன்றுளதென் றுண்மையுணர்த்திய அவனது ஞானாசாரியனையும், அவன்றாதையையும், குலத்தினையும் |