பதியினையும், அப்பாயிரத்துட் கூறுவதும் வரலாற்றுமுறைமையினான் மரபெனக் கொள்க. எனவே பதினாறென்ப துட்கோள். (60) இனிச் சிறப்புப்பாயிரத்தினதிலக்கணஞ் செப்புமாறு :- 61. | சிறப்பினதியல்பேதெரியினூனுதலிய திறப்படுபொருளைத்தன்னகத்தடக்கி யகவலின்வெள்ளையினறைவதொன்றாகும். |
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தி னிலக்கண முணர்-ற்று. (இ-ள்) சிறப்புப்பாயிரத் திலக்கணத்தை யாராயுமிடத்துப் புலவனா லுரைக்கப்படும் நூனுதலிய பொருளையெல்லாங் குறிப்புரையானன்றி வெளிப்படையாக அடக்குவாய்செய்து ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல் கூறத்தகுவதொன்றா மென்றவாறு. சிறப்பென்ற தீண்டொன்றற்குரிய தென்பதாம். (61) 62. | கலைகள்யாவையுங்கற்றுரைதெளிந்து துலைநாச்சமனிற்றுணிநிலைபுரியும் வாய்மையும்பிறர்க்கவைமயர்வறவளிக்குந் தூய்மையுஞ்சான்றதுணையிலனெனினு மொல்காப்பதினெண்ணுறுப்புடைநாற்பொருட் பல்காப்பியம்பழிப்பறநவம்புணர்க்கவு முத்தமிழ்க்கல்வியுமுத்தமவாக்கின் வித்தகக்கவிதையும்வேண்டினனாகிலுந் தற்புகழ்தலும்பிறன்றன்னையிகழ்தலும் பொற்பலவாகும்புலனுடையோர்க்கே. |
(எ-ன்) நூல்செய்தான் பாயிரஞ்செய்வானல்ல னென்பதுணர்-ற்று. (இ-ள்) இலக்கண இலக்கியங்களை முற்றப் பாடம்போற்றி யுரையைச் சந்தயமறத் தெளிந்து துலைநாப்போன்றும் துலாக்கோற்சமன் போன்று மையமுற்றபொருளை யையமறக் கேட்டோர்க்குணர்த்து |