241. | கொடைநலன்விதந்துரைப்பதுகொடைமிகுதி. |
(எ-ன்) கொடைமிகுதியுணர்-ற்று. இதன்பொருளும் உரையிற்கொள்க. படைக்கெதிர்நிற்பவரின்றாகுநேமிபரித்தபிரான் கொடைக்கெதிர்நிற்குங்கொடையுளதோமறைகூறுமுண்மைத் தொடைக்கெதிர்நிற்பக்கவிசொன்னமாறற்குச்சொன்னசொன்ன நடைக்கெதிர்நிற்பவுபயவிபூதியுநல்கினனே. | (568) |
இது கொடைமிகுதி. இதனுள், மறைகூறுமுண்மைத்தொடைக் கெதிர்நிற்பவென்றது பரத்துவத்தையும், ஆவியினையும், பூதத்தையும் உபநிடதங்கோத் தடைவேசொன்ன வுண்மைவாக்கியத்திற் கொப்ப வென்றவாறு. சொன்னசொன்னநடைக்கெதிர்நிற்ப வென்றது சொன்னலத்தி னொழுகலாற்றிற்கும், பொருணலத்தி னொழுகலாற்றிற்கும் பொருந்த வென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. (156) 242. | காந்தியைமிகுத்துரைப்பதுவேகாந்தி. |
(எ-ன்) காந்திமிகுதி யுணர்--ற்று. இதன்பொருளும் உரையிற்கொள்க. வேணுக்குழலிசைத்தவேங்கடமாலைப்புலவீ ராணுத்தமனென்பதாரறியார்--நாண்மலருட் பெண்ணுத்தமியிறையும்பேர்கிலாள்பேரழகைக் கண்ணுற்றவன்மார்பகம். | (569) |
இது காந்திமிகுதி. முன்னையது பாடாண்சார்ந்தபுறத்திணையிற் கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல். பின்னையது கடவுள்வாழ்த்து. ஆணுத்தமன் - புருடோத்தமன். பெண்ணுத்தமி - பெரியபிராட்டி. இறையும்பேர்கிலாள் - நீங்கிற்பிறளொருத்தி குடிபுகுவளென்பது கருத்து. (157) 243. | காமர்கற்புரைப்பதுகற்பின்மிகுதி. |
(எ-ன்) கற்புமிகுதி யுணர்--ற்று. இதன்பொருளும் உரையிற்கொள்க. |