பக்கம் எண் :

390மாறனலங்காரம்

சிந்துரவாணுதற்களபப்புளகமுலைத்துவரிதழ்வாய்ச்
      செவ்வேலுண்கட்
கொந்தவிழ்பூங்குழலீர்கைக்கொள்வீர்மாரனையடிமை
      கொள்வீர்மாதோ.
(644)

இது முதலிரண்டடியும் இடைமடக்கு.

இதனுள், அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன் னந்தண் சாரலென்பது-விசும்பின் உச்சியினின்றுமிழிந் தாரவாரிக்கு நீரருவியும், யானைத்திரளும் ஆலமரத்தினையலைக்கும் நிலைபெற்ற வடவேங்கட மென்னும் மலைக்கு மன்னன், அவனதாம் அழகிய குளிர்ந்த மலைப்பக்கத் தின்கண் ணென்றவாறு. பூந்துணர்மலிந்த வண்டழைய வண்டழை யதனைக்கொண்டுற்றே னென்பது - பூங்கொத்துக்கள் பரிமளத்தினாற் கூட்டமானவண்டுகளைத் தன்னிடத்தழைக்கப்பட்ட அழகியவளப் பத்தையுடைய சந்தனத்தழையதனைக் கையுறையாகக் கைக்கொண்டு நும்மிடத்துவந்தே னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. பகுதி - இதுவுமது. துறை - கருத்தறிவித்தல்.

கதியேபற்றுனர்ஞானக்கண்ணகலாக்கண்ணகலா
      காயங்காண்பா
னதியேமுற்றியவரங்கத்திடைதுயிலும்புயல்வரைமே
      னயந்துவாழ்நும்
பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீர்நறையீர்மென்
      பதுமைபோல்வீர்
மதியேதிங்கினியெனவுந்தெளிகிலனேகுதற்குமொரு
      வழிசொல்வீரே.
(645)

இது முதலடியும் மூன்றாமடியும் இடைமடக்கு.

(இ-ள்) பேரின்பத்தையுட்கொண்டா ருள்ளக்கண்ணைவிட்டு நீங்காத இடமகன்ற பரமாகாயத்தைச் சென்றுகாணவேண்டித் திருக்காவிரியாகிய விரண்டாறுசூழ்ந்த அரங்கத்தினடுவே கண்வளருங் காளமேகம்போன்ற திருமேனியையுடைய அரங்கநாதன்வரையினிடத்து விருப்பத்துடன் வாழுந்தேனோடுங்கூடிய குளிர்ந்ததாமரையாளையொப்பீர் ! இவ்விடத்து நும்முடையபதி யேதென்று கூறுகவென்றனன் கூறுகின்றிலீர், இனிமேன் மதி யாதென்றுந் துணிகிலன் ; மீண்டுபோவதற்கொருவழியுங் காண்கின்றில னென்றவாறு.