இதனுள், களபமுலைக்களபமுலைத்தேமென்கோதை என்பது மான் மதக்குழம்பையுடைய முலையாகிய யானையையும், முல்லைமாலிகையினது தேனொடுங்கூடிய குழலையுமுடையா ளென்றவாறு. பார் என்பது உலகின் கண்ணுயர்ந்தோ ரென்றவாறு. நீர்மைகுன்றாச் சீரெழுதியென்பது பெண்ணினதிலக்கணங்குன்றாத அவயவ அவயவிகளின்பொலிவினை யெழுதி யென்றவாறு. பகுதி - சேட்படை. துறை - மடலேறும்வகை யுரைத்தல். மறைபடுசொற்பொருளினைத்தெற்றெனத்தமிழ்செய்நாவீறன் மழைதோய்செவ்வி யுறைபடுதெள்ளறலருவித்துடரிவரையரமகளிர்க் குவமையாவீர் நறைபடுசந்தனப்பொழில்சூழ்புனத்திடைவந்தடைந்ததெனி னவில்வீரொன்னார் கறைபடுவன்பகழியொடுமன்னாகமன்னாகங் கதிகற்றாங்கே. | (643) |
இது நான்காமடியிடைமடக்கு. (இ-ள்) மறையிடத்துண்டானசொல்லின்கண் மறைந்தபொருளினைத் தெளியும்படிக்குத் தமிழ்மொழியாகச்செய்த நாவீறரது மேகம் படிந்த பருவத்துப்பெய்யுந் துளிகளாலுண்டான தெளிந்தநீராய்வரு மருவியையுடைய துடரிவரையில் அரமகளிர்க் குவமையாகப்பட்ட மங்கைமீர் ! முகையவிழ்ந்தபூவிற்றேன் றுளித் தாரவாரிக்குஞ் சந்தனப் பொழில்சூழ்ந்த நுமதுபுனத்தின்கண் சத்துருக்களைக் கொலைசெய் துண்டான குருதியின்முழுகிய பகழிதைத்ததொடும் ஒரு அரசுவா ஆக்கம்பெற்ற மலை நடைகற்றதுபோல வந்தடைந்த துண்டெனிற் கூறுவீராக வென்றவாறு. உவமையாவீரென்றதனாலவர்கள் காந்தியை யுயர்த்திக்கூறினானாம். ஆங்கு என்ற துவமவுருபு. கதி - நடை. பகுதி - மதியுடன்படுத்தல். துறை - வேழம்வினாதல். இவைநாலு மோரடியிடைமடக்கு. இனி யீரடியிடைமடக்கு வருமாறு :- அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன் னந்தண்சாரற் சந்தனப்பூந்துணர்மலிந்தவண்டழையவண்டழைய தனைக்கொண்டுற்றேன் |
|