புரந்தரனுங் களிப்பெய்த என்பதாம். எயிலார்.......... கோன் - கோட்டையாற் பெருத்த தெற்கின்கண்ணுண்டாய விலங்கையிலுள்ளார்க்கு அரசனாகிய விராவணன். பஃறலைக்கோர்....... ளூரான். பல தலைகளும் அறும்படிக் கொருவாளிதொட்ட திருவிந்தளூரான். மயிலாய்.......... பாரிப்பாயே - மயில்களாடப்பட்ட மேகந்தவழும் மலையிலுறையுந் தெய்வமனையாய் ! நினதுயிர்போன்றவளாய் நினதேவல்விரும்புமவளாம் மயில்போலுஞ்சாயலை யுடையாளை நின்னைக்காப்பவரா யிடைவிடாத ஆயவெள்ளத்தார் கூட்டத்தடைந்து திருக்கண்பார்வையாற் குறிப்பினுணர்த்திக் கருணையை விரிப்பாயாக வென்றவாறு. பகுதி - பாங்கற்கூட்டம். துறை - தோழியைக் காட்டென்றல். புண்டரிகப்பொகுட்டணங்கேமும்மதமாவிருமருப்பிற் புழைக்கைநீட்டி யொண்டிறலானொருவனைநம்மகிழ்மாறன்மகிழ்மாற னுறந்தையோங்கற் கொண்டலுணின்றிருபிறைநள்ளிடைவருபாம்பெனவளைத்துக் கொண்டகாலை மண்டமர்க்கூற்றுவன்கணிச்சியெனத்தடிந்தததனையவன் வாகைவேலே. | (641) |
இஃ திரண்டாமடியிடைமடக்கு. இதனுள், மகிழ்மாறன்மகிழ்மாறனுறந்தையோங்கல் என்பது வகுளமாலிகையையுடைய காரிமாறப்பிரான் மகிழ்ந்து போற்றும் மாயோன்றனது திருவுறையூர்வரையிடத்தென்பதாம். ஒழிந்தனவுரையிற் கொள்க. பகுதி - நடுங்கநாட்டம். துறையு மது. பாரெழுதும்படிக்கெழுதாமறைமொழியைத்தமிழ்மொழியாய்ப் பகர்ந்தமாற னீரெழுதெண்டிரைப்பொருநைத்திருநாடன்வரையணங்கி னீர்மைகுன்றாச் சீரெழுதியெனையெழுதிக்களபமுலைக்களபமுலைத் தேமென்கோதை யூரெழுதிப்பேரெழுதிக்கிழிகொடுசீறூர்மறுகே யுலாவுவேனே. | (642) |
இது மூன்றாமடியிடைமடக்கு. |