பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)489

கொல்யானைமூலமெனக்கூப்பிடமுன்காத்தானை
யெல்லாவுயிர்க்குமுயிரெனலாம்--புல்லாணித்
தோடார்நறுந்துளபத்தோண்மாலைக்கைதொழுதா
னாடானொருநாணமன்.
(795)

இது காதைகரப்பு.

இதனுட்போந்தசெய்யுள், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி, யெல்லா வுயிருந்தொழும்” என்பது. இதனைப் பழம்பாட்டெனவே மேலன நவமாமென்றுணர்க. இவற்றை மாறாடுவாரு முளர்.

(38)

பிரிந்தெதிர்செய்யுள்

290. பிரிந்தெதிர்வனவேபிரிந்தெதிர்செய்யுள்.

(எ-ன்) வைத்தமுறையானே பிரிந்தெதிர்செய்யுளாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுள் முதலேமுடிந்தா லச்செய்யுளீற்றெழுத்துத் தொடங்கி யெதிரேறாகநடந்து வேறோர்செய்யுளாக நிகழ்தல் பிரிந்தெதிர் செய்யுளா மென்றவாறு.

நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா.
(786)

இது பிரிந்தெதிர்செய்யுள். இதனுள், பிரிந்தெதிர்செய்யுளாவது :-

காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ.

என்பதாம். இவற்றுள், முதலேநடந்தசெய்யுளின்பொருள் :-  நீரநாக - நற்குணத்தனே ! அனந்தசயனத்தனே ! மா தாரமாக - திருமகளைப் பாரியாக. மேவாரமாக - பொருந்து மாரங்கிடக்கு மார்பனே ! மாணாரணாக - பெருமையையுடைய வேதசொரூபனே ! கா - என்னைக் காப்பாயாக வென்றவாறு.