பக்கம் எண் :

490மாறனலங்காரம்

எதிரேற்றின்பொருள்:-  மாகமாரவாம் - துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார - நற்குணத்தையுடையவனே ! மேகமாக - மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா - சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே ! நாரணா - நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் - நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா - எம்மைக் காப்பாயாக வென்றவாறு.

இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை - கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது.

(39)

பிறிதுபடுபாட்டு

291. பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே.

(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று.

(இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு.

பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந்
தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா
யாரியனேயாரணத்தந்தியனேவாரி
வாரியுணாகணைமன்னா.
(797)

இது பிறிதுபடுபாட்டு.

இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க. தார் - பூ. ஆரியன் - பரமாசாரியன். வாரி - கடல். வாரி - மிகுதி.

(40)

சருப்பதோபத்திரம்

292. இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை
யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந்
தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச்
சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம்.

(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று.