(இ-ள்) எவ்வெட்டெழுத்தோரடியாய் நான்கடியாய்வரு மெண்ணான்கெழுத்து டையதொருசெய்யுளை யறுபத்துநாலறையினி லிரண்டு கூறுபாட்டானெழுதவவற்றுண் முழுதுமடங்கி நாலுமுகத்தினு முதல் முதலாகியு மீறு முதலாகியு மாலைமாற்றாகிவருமது சருப்பதோபத்திரமா மென்றவாறு. இரண்டுகூறுபாடாவது நான்கடியும் மேனின்று கீழிழியவுங் கீழ் நின்று மேலேறவும் எழுதுவதாம். இது மாட்டுறுப்புப்பொருள்கோள். தேமாபூமாமாபூமாதே மாதாகாவாவாகாதாமா பூகாவாலாலாவாகாபூ மாவாலாநீநீலாவாமா. | (798) |
இது சருப்பதோபத்திரம். இதனகத் தவ்வாறுநிகழ்ந்தமை கண்டு கொள்க. (இ-ள்) தே மா பூ - தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து. மாமா - பெரிய திருமகளும். பூமாதேமாது - பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள். ஆகாவாவாகா - (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும் புயத்தினையு முடையவனே ! தாமா - துளவமாலிகையையுடையவனே ! பூகாவாலாலா - பூமியையெடுக்கப் பட்ட பிரளயத்தின்மே லாலிலையிற் றுயிலப்பட்டவனே! பூமாவாலா - பொலிவினொடுங்கூடிய மிகுந்த பாலத்தன்மையோனே ! நீலா வாமா - நீலநிறத்தினனே ! வாமனரூபமானவனே ! மூன்றாமடியிலிறுதி வாகா நாலாமடியின் முந்தவந்த நீ என்னுமவற்றொடுங்கூட்டி, நீ வா கா வெனச் சேர்த்து, நீ வந் தென்னைக் காப்பாயாக வென்றவாறு. இதனுள், ஏமம் ஏம் என நின்றது. உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமைபன்மைமயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருளுரைத்தவாறு காண்க. ஆல் - பிரளயம். வா - வந்து. மாது - மாதர்கள். பூ - தாமரை. பூ - பொலிவு. (41) கூடசதுர்த்தம் 293. | பாடலினாலாம்பதம்பொறிவரியிடைக் கூடமுற்றதுவேகூடசதுர்த்தம். |
(எ-ன்) கூடசதுர்த்தமாமாறுணர் - ற்று. |