(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு. நாதாமானதாதூயதாருளா ணீதானாவாசீராமனாமனா போதாசீமானாதரவிராமா தாதாதாணீவாமனாசீதரா. | (799) |
இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க. (இ-ள்) நாதா மானதா - சுவாமியே ! என்மனத்திலுள்ளானே ! தூயதாருளா ணீதா னாவா - பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக. அதுவுமின்றி, சீராமனாமனா - சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் - அழகுடையவனே! ஆதரவிராமா - சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா - போதத்திலுள்ளானே ! வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ - உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு. துறை - இரண்டுங் கடவுள்வாழ்த்து. (42) கோமூத்திரி 294. | கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி. |
(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று. (இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு. அஃதாவது ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல். மாயாமாயாநாதாமாவா வேயாநாதாகோதாவேதா காயாகாயாபோதாகாவா பாயாமீதாபேதாபேதா. | (800) |
இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டுகொள்க. |