பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)493

(இ-ள்) மாயாமாயா - அழியாத மாயையையுடையவனே ! நாதா - சுவாமியே ! மாவா - திருமகளையுடையவனே ! வேயாநாதா - வேய்ங்குழலிலுண்டாக்குங் கானத்தையுடையவனே ! கோதாவேதா - பசுவைக் காத்தளித்த வேதசொரூபனே ! காயாகாயா - காயாம்பூப் போலுந் திருமேனியையுடையவனே ! போதா - ஞானத்தையுடையவனே ! பேதாபேதா - பேதமும் அபேதமுமானவனே! பாயாமீதா - பரந்த பிரளயத்தின் மேலானவனே ! காவா - என்னைக் காக்க வருவாயாக வென்றவாறு. பா - கலிவிருத்தம். துறை - கடவுள்வாழ்த்து.

(43)

சுழிகுளம்

295. தெழித்தெழுநீர்குளத்தினுட்செறிந்ததைக்கொடு
சுழித்தடங்குவபோன்றடங்குதல்சுழிகுளம்.

(எ-ன்) சுழிகுளமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஆரவாரித்தெழாநின்ற புனல் குளத்தினுட் டனதிடத் தடைந்ததியாதொன் றதனைக் கைக்கொண்டு சுற்றி யுள்ளேயடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக்கொண்டடங்குதல் சுழிகுளமா மென்றவாறு.

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான.
(801)

இது சுழிகுளம். இஃ தவ்வாறாத லெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) தாளவொத்துக்குப்பொருந்தக் கூத்தாடாநின்றவனே ! உண்மையான காவற்றொழிலை யுனதாகக் கைக்கொண்டவனே ! தயிரைத் தாகித்துண்ட கண்டத்தையுடையவனே ! கிளர்ந்தகானத்தையுடையவனே ! நீயே கதி, காப்பாயாக வென்றவாறு. பா - வஞ்சித்துறை. துறை - இதுவுமது.  

(44)

திரிபங்கி

296. நனியொருபாவாய்நடந்ததுதானே
தனிதனிமூன்றாஞ்சால்புறுபொருண்மையிற்
பகுப்பநிற்பதுதிரிபங்கியதாகும்.