(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று. (இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய் மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு. வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார் சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார் நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே. | (802) |
இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :- | வாரிதிபார் | மன்மதன்பூசல்பார் | வெய்யமாமதிபார் | ஊரலர்பார் | அன்னையிங்கேசல்பார் | உய்யுமாறிலைபார் | சோர்குழல்பார் | பொன்னிறஞ்சேர்தல்பார | துய்யமான்மயல்பார் | நாரணனே. (1) | தென்னரங்கேசனே. (2) | தெய்வநாயகனே. (3) |
எழுகூற்றிருக்கை 297. | ஒன்றுமுதலாவோரேழீறாச் சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை. |
(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று. (இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு. செய்யுளகத்தென்பது சொல்லெச்சம். (46) 298. | அவைதாம், இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச் சரதமதுறநடைசார்தருபான்மையி னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய் நின்றயலேனவுநிலந்தொறுமுபயங் குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும். |
(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது. |