யாதோவெனின் ஒப்பினாகியபெயருங் காரணமாகியபெயருங் குறித்துரைக்கப் படுதலா னவற்றினானே யுணர்ந்துகொள்க. அஃதேல் மாலை மாற்றுஞ் சுழிகுளமும் சருப்பதோபத்திரமுங் கோமூத்திரியுமென நான்குமேயன்றே யாண்டாசிரியனால் வடநூலு ளுரைக்கப்பட்டன. ஒழிந்த மிறைக்கவி யீண்டுரைத்தல் மிகை படக்கூறிற்றாம்பிறவெனின், ஆகா ; ஒழிந்தன ஒன்றினமுடித்த றன்னின முடித்தலென்னுந் தந்திரவுத்தியானுரைக்கப்பட்டது. அல்லதூஉம், வடமொழிமுதனூலாதலாற் றனக்கொருவிகற்பம்படக் கூறுதலிலக்கணமென்பது ; “முன்னோர்நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன்வேண்டும்விகற்பங்கூறி, யழியாமரபினதுவழி நூலாகும்” என்பவாகலின். (28) எச்சவியலுரை முற்றும். தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற் குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல் வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே. |
மாறனலங்காரம் முற்றும். |