இதன்பொழிப்பு ; செய்யுளெனத் தொகையானொன்றாயதனை வெண்பா வாசிரியமெனப் பகுத்த விருவகையினின்றுங் கலி வஞ்சி மருட்பா பரிபாட லென்னு நான்கினொடு மாறென விரித் தவற்றைத் தெளியும்படிக்குப் பொருள்பெறும் நான்கென்றுபகுத்த முத்தகங் குளகந் தொகை தொடர்நிலையென்னுஞ் செய்யுண்மரபும், வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்றுபாகமும், அவற்றொடும்பயில்வதான இன்பம் தெளிவு செறிவு சமனிலை இன்னிசை உதாரம் வலி காந்தம் உய்த்தலில் பொருண்மை சமாதி யெனக்கூறப்பட்ட பத்துவகைக்குணமும், தன்மை முதற் பாவிகமீறாக வறுபத்துநாலென்னு மெண்ணையுடைய பொருளலங்காரமும், அடியினானுஞ் சொல்லினானு மெழுத்தினானு மடுக்கப்பட்டனவாகி முற்றுப்பெறவகுத்த மூன்றுவகை மடக்கலங்காரமும், வல்லின மெல்லின மிடையினமென்னு மூவினப்பாடன்முதலாக முறையினோடும் பொருந்திய விருபத்தாறின்மேலு மாறுகூட்டி முப்பத்திரண்டென விழுமிதாய சித்திரக்கவிகளும் விரித்தபின்னர்க் குறையாய்நின்றனவாய வழுவும், வழுவமைதியு மிவையிவையென விரண்டுகூறாக்கிக்கூறிய பதினைந்தினொடு மணியிலக்கணநிரம்பாம லொழிந்தனவாய்வருவனவுள வெனினு மவற்றையு மிவற்றினகத்தகப்படத் தழீஇக்கோடல் கற்றறிந்த வுத்தமர்கடனா மென்றவாறு. அஃதேல் முற்கூறியனவல்லவோ மீண்டுங்கூறிற்று ; புனருத்தியாம் பிறவெனின், ஆகாது ; தொகுத்துமுடித்தலென்பது தந்திரவுத்தியாகலா னிவ்வாறுரைக்கப்பட்டதென்றறிக. அஃதாக, “குறித்துரையெழுத்தொடு கூற்றவை செய்யுளி” னென்றமுறையானே எழுத்து மொழி யடி யென்னா தீண்டு அடி மொழி யெழுத்தென்று முறைபிறழக்கூறியவா றென்னையெனின் முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றென்னு முத்தி வகையான் அடிமடக்கென்பதும் சொன்மடக்கென்பதும் எழுத்தின் கூட்டமென்ப தறிவித்தற்கும் ஓரெழுத்தானும் ஓரினத்தானும் வருவனவு மதன்பாற்படுமென்றற்கும் என்க. நிரோட்டிய மோட்டியமுதலாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் நோக்கியாராயுங்காற் பெரும்பான்மையும் எழுத்தின்பாற்படுமாயினு மவை வேறுவேறு சிறப்புப்பெயருடையவா யுலகி னுண்டாக்குகின்றனவாகலாற் சொல்லின்முடியுமிலக்கணத்தா னவ்வாறு சொல்லப்பட்டது. சொல்லின்முடியுமிலக்கணந்தான் |