*இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின் றிடங்கொள்புல்லறிவினரேனுஞ் சிறந்தவந்நகரத்தினியொருபிறவி சிறக்கவிங்கெமக்கெனத்தியானம் பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதே பிறக்கிடுமவரையென்றூத ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுக் கழலகத்தமைப்பரக்கணத்தே. | (844) |
இஃது ஆகமமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று. (27) 327. | ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத் தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும் பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு மடிமொழியெழுத்தினடுக்கினவாக முடிவுறவகுத்தமூவகைமடக்கு மூவினப்பாடன்முதலாமுறைமையின் மேவினவிருபானாறன்மேலாறென விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய வழுவழுவமைதியுமிவையெனவகுத்து மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே. |
இச்சூத்திரம் இந்நூலுளுரைத்த விலக்கணமனைத்துந் தொகுத்திவ்வணி யிலக்கணத்திற்குப் பிறவாறுவருவனவுளவெனினு மவற்றையுந் தழீஇக்கொள்க வெனப் புறநடையுணர்த்துகின்றது.
* இச்செய்யுள் பின்வருமாறு குருகாமான்மியத்துக் காணப்படுகிறது. “இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்றிடங்கொள்புல்லறிவினோரெனினுஞ் சிறந்தபேரறிவின்மேலொருசெனனஞ்செறிகவாங்கெமக்கெனத்தியானம் பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதேபிறக்கிடுமவரையென்றூத ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுமழலகத்தமைப்பனக்கணக்கே.” |
|