லாடவர்முகத்தையுமருணோதயமென வேடவிழாம்பலினத்தொடுமுகிழ்க்கும் பாடல்சான்மருதப்பார்த்திபர்தலைவ பொழுதுமாறுதனின்புலக்கருப்பொருட்கு முழுதுமுண்மையதான்மொழிபலகிளைத்தெவன் புலந்தெவன்பொதுவுணின்மார்வங் கலந்தெவன்றீண்டலெங்காமர்மெல்லணையே. | (840) |
இதனுள் மாலையிற்குவியுங் கமலங் காலையிற் குவிந்ததாகவும், காலையிற் குவியும் ஆம்பல் மாலையிற்குவிந்ததாகவுங்கூறியது காலமலை வாயினும் புனைந்துரைவகையா னலங்காரமாயிற்று. பகுதி - பரத்தையிற் பிரிதல். துறை - பள்ளியிடத்தூடல். வெயினுழைந்தறியாப்பணைமரச்செறிவுள் வெறிவரிவண்டினமிரைத்துப் பயின்முகையவிழ்ந்துபனிற்றுதெண்ணறவைப் பருவமாமழைப்பெயலெனவே குயிலடங்கலுந்தாம்பொதும்பருளொளிப்பக் குறிப்பொடும்வெளிப்படவிருந்து மயிலடங்கலுந்தாமகவலுங்களிப்ப வருந்தனீமதர்மழைக்கண்ணாய். | (841) |
இதனுள், கார்க்குரியன வேனிற்குப்புணர்த்தும் புனைந்துரை வகையா னலங்காரமாயிற்று. செறியுமிற்றொறும்புனன்மலர்முதலியசிறப்பின் குறியமந்திரத்தமைந்துளவுறுப்பினிற்கொடுபோழ் தறிவிழந்தவைமுறைதடுமாறினுமவையே நெறியவாயிறையுட்கொளநிறைக்குநன்னீரார். | (842) |
இது கலைமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று. வண்டுலவுந்தண்டுளபப்பெம்மானேயனைத்துயிர்க்கும்வசதியாய வண்டரண்டபகிரண்டமகத்தடக்குமுழுமுதனீயாயிற்றென்றாற் பண்டுலகமனைத்தையுமோரடலெயிற்றாலிடந்தளந்தபான்மையல்லா துண்டுமிழ்ந்தபடியயல்கண்டிருந்தவராரெவணிருந்தன்றுண்டவாறே | (843) |
இது நியாயமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று. |